குமாரபாளையம்; சமூக விரோத செயல்களை தடுக்க உயர் கண்காணிப்பு கோபுரம்!
குமாரபாளையத்தில் சமூக விரோத செயல்களை தடுக்க, போலீசார் உயர் கண்காணிப்பு கோபுரம் அமைத்துள்ளனர்.;
சமூக விரோத செயல்களை கண்காணிக்க, அவற்றை தடுக்க போலீசார் அமைத்த உயர் கண்காணிப்பு கோபுரம்
குமாரபாளையத்தில் சமூக விரோத செயல்களை கண்காணிக்கவும், தடுக்கவும் போலீசார் உயர் கண்காணிப்பு கோபுரம் அமைத்துள்ளனர்.
தீபாவளி திருவிழாவையொட்டி நகைக்கடை, துணிக்கடை உள்ளிட்ட பல வியாபார நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. நகை பறிப்பு, பணம் திருட்டு உள்ளிட்ட சமூக விரோத செயல்களை கண்காணிக்க குமாரபாளையத்தில் போலீசாரால் உயர்கண்காணிப்பு கோபுரங்கள் பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு சாலை உள்ளிட்ட பல இடங்களில் இந்த கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார் இந்த கோபுரம் மீது இருந்தவாறு கண்காணித்து வருவதால் நகைகள் வாங்குவது, துணிகள் வாங்குவது என பொதுமக்கள் அச்சமின்றி கடைவீதிகளில் நடமாடி வருகின்றனர்.