புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைகாரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-07-28 00:45 GMT

குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஜூலை 9ல், குமாரபாளையம் ஆனங்கூர் ரோடு சுந்தரம் காலனியில் குடியிருந்து வந்தவர் ராஜசிங் (வயது 20. ). இவர் குமாரபாளையம் சேலம் மெயின் ரோட்டில் சாமி ஸ்டோர் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வந்தார். மளிகை ஸ்டோர் மேல் மாடியில் தங்குவதற்கான அறையில், இரகசிய தகவலின் பேரில் குமாரபாளையம் போலீசார் திடீர் சோதனை செய்து பார்த்தனர். ‘

அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்பராக் பாக்கெட்டுகள் சுமார் 75 கிலோ விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து, ராஜசிங்கை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜசிங் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவார் என கருதி  நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இந்த  பரிந்துரையின்படி நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து  சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராஜசிங்கிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டதற்கான ஆணை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News