இலவச பொது மருத்துவ முகாம்

குமாரபாளையத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2024-05-26 13:15 GMT

குமாரபாளையத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.

குமாரபாளையத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.

குமாரபாளையத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நேதாஜி நகரில், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. குமாரபாளையம் ஜோ மருத்துவமனை டாக்டர் நடராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர். இதில் சர்க்கரை நோயாளிகளுக்கான பரிசோதனை, சிறுநீரகம், இருதயம், கால் நரம்பு சம்பந்தமான அனைத்து பரிசோதனைகளும் நடைபெற்றதுடன், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.

இலவச கண் சிகிச்சை முகாம்

குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் பட்டய தலைவர் ஜெகதீஷ் தலைமையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. ஈரோடு அரசன் கண் மருத்துவமனை மருத்துவகுழுவினர் பங்கேற்று சிகிச்சை வழங்கினர்.

இதில் கிட்ட பார்வை, தூரப்பார்வை, கண்ணில் நீர் வடிதல், விழித்திரை மூடியமைக்கு அதனை அகற்றி சிகிச்சை, கண் வலி, கண் எரிச்சல், உள்ளிட்ட பல சிகிச்சைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அம்மன் நகர், நாராயண நகர், மேற்கு காலனி, கிழக்கு காலனி, சுள்ளிமடைதோட்டம், உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று பயன்பெற்றனர், மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. கண் அறுவை சிகிச்சைக்கு 32 பேர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னாள் தலைவர் சன்முகசுந்தரம், தலைவர் மாதேஸ்வரன், செயலர் கதிர்வேல், பொருளர் செல்லவேல், உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News