திருச்செங்கோடு அருகே ஒரு குடும்பமே மாயம்: போலீசார் விசாரணை
திருச்செங்கோடு அருகே மொளசி பகுதியில் மனைவி, மகள், மகன், மாமியார் உள்பட 7 பேர் மாயமானது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.;
திருச்செங்கோடு அருகே மொளசி பகுதியில் வசிப்பவர் நசீர், 32. சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி தாசின், 26.
இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தாசின் தன் பிள்ளைகளுடன் அருகே உள்ள தன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தனர். பலமுறை அழைத்தும் வரவில்லை.
கடந்த பிப்ரவரி 5ம் தேதி இரவு 11 மணிக்கு பெற்றோர் வீட்டில் தூங்க சென்றவர்கள் மறுநாள் காலை எழுந்து பார்த்த போது, மாமியார், மனைவி தாசின் மற்றும் குழந்தைகள் ஆகிய 3 பேருடன், மாமியார் சாகிதாபானு, 45, மைத்துனி நாஜியா, 21, இவரது குழந்தை நிஷால், 2, ஆகிய மொத்தம் 7 பேர் காணவில்லை.
இது குறித்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் மொளசி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.