குமாரபாளையத்தில் சாவிலும் இணை பிரியாத தம்பதி
குமாரபாளையம் அருகே கணவர் இறந்த சில நிமிடங்களில் மனைவியும் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது;
குமாரபாளையம் தெற்கு காலனியில் வசிப்பவர் திருச்செங்கோட்டை சேர்ந்த நாராயணன், 68. இவரது மனைவி ராஜேஸ்வரி, 67. திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த இவர்கள் குமாரபாளையத்தில் உள்ள நாராயணன் நகர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர்
இவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் இல்லாததால் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்ந்து வந்தனர். பாசமாகவும், அன்பு செலுத்தியும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்தி வந்தனர். விசைத்தறி கூலி. நாராயணன், உடல்நலமில்லாமல் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று உடல்நிலை மிகவும் மோசமடைந்து நாராயணன் பரிதாபமாக இறந்தார். இவர் இறந்த துக்கம் தாள முடியாமல் ராஜேஸ்வரி அழுதபடி இருந்தார். சில நிமிடங்களில் திடீரென்று மயங்கி சாய்ந்தவர் இறந்தார்.
இவர்கள் இப்பகுதியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து, அனைவரிடமும் அன்பாக பழகி வந்துள்ளனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்றாலும், எவ்வித சண்டை, சச்சரவுகள் இல்லாமல் அன்புடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சம்பவம் குமாரபாளையத்தில் கண் கலங்க வைத்துள்ளது. நீயின்றி நானில்லை என சாவிலும் இணைபிரியாத தம்பதியை நினைத்து அப்பகுதி மக்கள் கண்கலங்கினர்.
வயதான காலத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து வந்த நிலையில் கணவனுடன், மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல ஆண்டுகள் இணைபிரியாமல் வாழ்ந்து வந்த தம்பதி இறப்பிலும், இணைபிரியாமல் இறந்துள்ளனர் என்று கூறி ஊர் மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கணவர் இறந்த நிலையில் மனைவியும் இறந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களது உடல்கள் அருகருகே வைக்கபட்டிருந்தது. இப்பகுதி மக்கள் பெரும்பாலோர் இவர்களுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.