குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன் ரேஷன் கார்டு நகல் எரிப்பால் பரபரப்பு

குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன் ரேஷன் கார்டு நகல் எரிப்பு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-01-21 12:30 GMT

 குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு ரேசன் கார்டு நகல் எரிப்பில் ஈடுபட்ட செல்வராஜ்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அபெக்ஸ் காலனியில் வசிப்பவர் செல்வராஜ், 52. இவரது ரேஷன் கார்டு மூலம் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, அரிசி கார்டாக இருந்த இவரது கார்டு மூலம் தமிழக அரசால் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றதாகவும்.

அதே ஆண்டு பிப்ரவரி முதல் அந்த கார்டு தகுதியிழந்த கார்டாக மாறியதாகவும் கூறப்படுகிறது. ஒரு ஆண்டாக இதனை மீண்டும் ரேஷன் பொருட்கள் வாங்கும் வகையில் செயல்படக்கூடிய கார்டாக மாற்றித்தர விண்ணப்பம் செய்தும் இதுவரை மற்றித்தரப்படவில்லை எனத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ், குமாரபாளையத்தில் தாலுகா அலுவலகம் முன்பு ரேஷன் கார்டு நகல் எரிப்பில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து வட்ட வழங்கல் அலுவலக அலுவலர்கள் கூறுகையில், பொதுமக்கள் பலர் மொபைல் போன் மூலம் ரேஷன் கார்டை மாற்றி வருகிறார்கள். சரியான வழிமுறை தெரியாமல் மாற்றம் செய்வதால் பல குளறுபடிகள் ஏற்படுகின்றன.

இப்படிப்பட்ட பலரது கார்டுகள் மீதான நடவடிக்கை குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மாநில வட்ட வழங்கல் துறை அலுவலகம் ஆகியவற்றிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. செல்வராஜ் கார்டு சம்பந்தமாகவும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பதில் வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News