குமாரபாளையம் அருகே டூ வீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்

குமாரபாளையம் அருகே டூ வீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.;

Update: 2022-08-31 15:30 GMT

குமாரபாளையம் காவல்நிலையம் (பைல் படம்).

ஈரோடு மாவட்டம் பவானி லட்சுமி நகரை சேர்ந்தவர் குமரன்(வயது 20) கூலித் தொழிலாளி. இவர் தனது யமஹா டூவீலரில் சேலம் -கோவை புறவழிச்சாலையில்  குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பள்ளி அருகே வந்த போது, பின்னால் வந்த ஹுண்டாய் கார் ஓட்டுனர் டூவீலர் மீது வேகமாக மோதியதில் குமரன் படுகாயமடைந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுனர் சித்தோடு பகுதியை சேர்ந்த பிரபு( 40) என்பவரை கைது செய்தனர். 

Tags:    

Similar News