குமாரபாளையம் அருகே 90 வயது மூதாட்டியை தாக்கிய நபர் கைது

குமாரபாளையம் அருகே 90 வயது மூதாட்டியை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-09-04 12:15 GMT

குமாரபாளையம் அருகே 90 வயது மூதாட்டியை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் வசிப்பவர் பாவாயி, (வயது90). இவரது தனது தங்கை மகள் வளர்மதியுடன் வசித்து வருகிறார். வளர்மதிக்கும், உறவினர் மனோகரன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்றுமுன்தினம் மாலை 02:00 மணியளவில் மனோகரன் வீட்டு வழியாக பாவாயி நடந்து சென்றுள்ளார்.

அப்போது இந்த பக்கம் எதற்கு  வந்தாய்? என கேட்டு பாவாயியை மனோகரன்  தடியால் தாக்கியுள்ளார். வலி தாங்க முடியாமல் சத்தம் போட, வளர்மதி மற்றும் அருகில் வசிக்கும் மல்லிகா ஆகியோர் ஓடி வந்து இவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இது குறித்து குமாரபாளையம் போலீசில் பாவாயி புகார் மனு கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் மனோகரனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News