5 வயது சிறுமி 15 நிமிடத்தில் 75 யோகா செய்து உலக சாதனை!

குமாரபாளையத்தில் 5 வயது சிறுமி 15 நிமிடத்தில் 75 யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார்.;

Update: 2024-10-06 13:45 GMT

குமாரபாளையத்தில் உலக சாதனை செய்த மாணவியை முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட பலர் பாராட்டினர்.  

5 வயது சிறுமி 15 நிமிடத்தில் 75 யோகா செய்து உலக சாதனை; முன்னாள் அமைச்சர் பாராட்டு

குமாரபாளையத்தில் 5 வயது சிறுமி 15 நிமிடத்தில் 75 யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் பிரவீன்குமார், சுஜிதா தம்பதியர் மகளான கிருஷ்மிதா, 5, என்பவரின் உலக சாதனை யோகா நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் அமைச்சர் தங்கமணி இதனை துவக்கி வைத்தார். 15 நிமிடத்தில் 75 யோகாசனங்கள் செய்து உலக சாதனை படைத்தார். இது ஹைரேன்ஜ் புக் அப் ரெக்கார்ட்ஸ் எனும் உலக சாதனை புத்தகத்தில் பதிவாகிறது. அனைத்து ஆசனங்களையும் நினைவு கூர்ந்து தன் திறமையை வெளிப்படுத்திய இவரது திறன் மாணவர்களுக்கு முன் மாதிரியாக அமைந்தது.

யோகா பயிற்சியாளர் குணசேகரன் கூறியதாவது: இது போன்ற சாதனைகள் மற்றவர்களையும் யோகாசனம் செய்ய தூண்டுவதற்கு ஏதுவானதாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அருணா பழனிச்சாமி, வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலர் செந்தில், தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலர் குமரேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News