வெப்படை துணை மின்நிலைய பகுதிகளில் வரும் 8ம் தேதி மின் நிறுத்தம்

குமாரபாளையம் அருகே வெப்படை துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் டிசம்பர் 8ல் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.;

Update: 2021-12-06 13:45 GMT

பைல் படம்.

குமாரபாளையம் அருகே வெப்படை துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக டிச. 8ல் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து பள்ளிபாளையம் மின் வாரிய செயற்பொறியாளர் வாசுதேவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமாரபாளையம் அருகே வெப்படை துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக டிச. 8ல் காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இதனால் வெப்படை, பாதரை, இந்திரா நகர், ரங்கனூர் நால் ரோடு, புதுப்பாளையம், எலந்தகுட்டை, தாண்டான்காடு, காந்தி நகர், சின்னார்பாளையம், ஈ. காட்டூர், புது மண்டபத்தூர், தெற்குபாளையம், மாதேஸ்வரன்கோவில், வெடியரசம்பாளையம், செம்பாறைக்காடு, சின்னாக்கவுண்டம்பாளையம், களியனூர், மாம்பாளையம், மோளக்கவுண்டம்பாளையம், மற்றும் எளையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது எனஅறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News