மகன்களால் கைவிடப்பட்ட 81 வயது மூதாட்டி குமாரபாளையம் போலீசில் புகார்

குமாரபாளையத்தில் 81 வயது மூதாட்டியை நிர்கதியாக பஸ் ஸ்டாண்டில் விட்ட மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மூதாட்டி போலீசில் புகார் செய்தார்.

Update: 2022-08-10 15:15 GMT

குமாரபாளையத்தில் 81 வயது மூதாட்டியை நிர்கதியாக பஸ் ஸ்டாண்டில் விட்ட மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மூதாட்டி போலீசில் புகார் செய்தார்.

இது பற்றி மூதாட்டி லட்சுமியம்மாள் கூறியதாவது:

எனது கணவர் தண்டபாணி இறந்து 42 ஆண்டுகள் ஆனது. மூத்த மகன் குணசேகரன்  சில மாதங்கள் முன்பு இறந்து விட்டான். குணசேகரனின் மனைவி என்னை முதியோர் காப்பகத்தில் சேர்த்தார். அங்கு வந்து என்னிடம் இருந்த நகை 7 பவுன் மற்றும் ரொக்கம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ஆகியவற்றை பறித்து கொண்டு, காப்பகத்தில் இருப்போரை மிரட்டி என்னை 2வது மகன் ராஜேந்திரன் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் கொண்டு வந்து, விட்டுவிட்டு சென்று விட்டான். மூன்றாவது மகன் சரவணன் கண்டுகொள்வதில்லை. நிர்கதியாக விட்டு சென்ற எனது மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இவரை நாராயண நகர் கவுன்சிலர் அம்பிகா மற்றும் லட்சுமியம்மாளின் பக்கத்து வீட்டுக்காரர் ஆகியோர் உணவு மருத்துவ உதவி கொடுத்து உதவி வருகிறார்கள்.

Tags:    

Similar News