நிறுத்தி வைத்த லாரி மீது அரசு பஸ் மோதியதில் 8 பேர் படுகாயம்

குமாரபாளையம் அருகே நிறுத்தி வைத்த லாரி மீது அரசு பஸ் மோதியதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2024-12-23 12:15 GMT

நிறுத்தி வைத்த லாரி மீது அரசு பஸ் மோதியதில் 8 பேர் படுகாயம்

குமாரபாளையம் அருகே நிறுத்தி வைத்த லாரி மீது அரசு பஸ் மோதியதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

கோவையிலிருந்து சேலம் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்றுமுன்தினம் இரவு 11:40 மணியளவில் புறவழிச்சாலை கோட்டைமேடு மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. முன்னால் சென்ற லாரி ஒன்று திடீரென்று இடது புறம் திரும்பி சென்றதால், அரசு பஸ் ஓட்டுனர் காவேரி பட்டணத்தை சேர்ந்த செந்தில்குமார், 43, பஸ்ஸை வலது புறம் திருப்ப, அங்கு ஏற்கனவே பழுதாகி, எவ்வித சிக்னலும் இல்லாமல் நிறுத்தி வைத்திருந்த டாரஸ் லாரி மீது மோதியதில், பல்வேறு ஊர்களை சேர்ந்த பயணிகள் பகுத்தறிவு, 23, மருதமுத்து, 40, நஞ்சம்மாள், 48, பிரசாந்த், 22, முத்துராஜா, 37, கவிபிரியா,11, லோகம்பாள், 37, ராகதேவன், 23, ஆகிய 8 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான, பழுதாகி, சிக்னல் இல்லாமல் நிறுத்தி வைத்த, திருச்சியை சேர்ந்த பிரவீன்குமார், 23, என்ற லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News