குமாரபாளையம் அருகே ரூ.7.5 லட்சம் மதிப்பில் புதிய கழிவறை திறப்பு விழா
குமாரபாளையம் அருகே 7.5 லட்சம் மதிப்பிலான புதிய கழிப்பிட திறப்பு விழா நடைபெற்றது.;
குமாரபாளையம் அருகே 7.5 லட்சம் மதிப்பிலான புதிய கழிப்பிட திறப்பு விழா நடைபெற்றது.
குப்பாண்டபாளையம் ஊராட்சி குள்ளநாயக்கன்பாளையம் அருந்ததியர் தெரு பகுதியில் அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கழிப்பிடம் வேண்டி கோரிக்கை விடுத்தனர். இதனை பரிசீலித்த ஊராட்சி தலைவி கவிதா, ஒன்றிய அலுவலக பி.டி.ஒ. உள்ளிட்ட அதிகாரிகளின் ஒப்புதலுடன் தாய் திட்டத்தின் கீழ் 7.5 லட்சம் நிதி உதவி பெற்று கழிப்பிடம் கட்டும் பணி துவக்கினார்.
தன் திறப்பு விழாவில் ஊராட்சி தலைவி கவிதா தலைமை வகித்து ரிப்பன் வெட்டி புதிய கழிப்பிடத்தை திறந்து வைத்தார். இதில் ஆண்களுக்கு, பெண்களுக்கு தலா 3 அறைகள், மாற்றுத்திறனாளிக்கு ஒரு அறை என 7 அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றிய கவுன்சிலர் தனசேகரன், ஊராட்சி தி.மு.க. நிர்வாகிகள் வேலுமணி, ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த கழிப்பிடம் திறந்து விடப்பட்டதால் இப்பகுதி மக்கள் ஊராட்சி தலைவி கவிதாவுக்கு நன்றி தெரிவித்தனர்.