குமாரபாளையம் நகராட்சியில் 72 பேர் வேட்புமனு தாக்கல்

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் 72 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.;

Update: 2022-02-03 14:45 GMT

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் 72 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழக அரசு சார்பில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நேற்றுமுன்தினம் வரை 41 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் நேற்று அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் என பல தரப்பினரும் சேர்ந்து 72 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இன்று வேட்புமனு தாக்கல் இறுதி நாள் என்பதால் அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் பிரதான கட்சியினர் அதிக அளவில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News