சித்தோடு அருகே தெரு நாய்கள் கடித்து 7 ஆடுகள் சாவு: விவசாயிகள் சோகம்

பவானி, சித்தோடு அருகே தெரு நாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-10-01 16:30 GMT

பவானி, சித்தோடு அருகே தெரு நாய்கள் கடித்ததில் உயிரிழந்த 7 ஆடுகள்.

சித்தோடு கங்காபுரம், வேட்டையன்காடு பகுதியை சேர்ந்தவர்கள் பழனிச்சாமி, 40, ராமன், 35. விவசாயிகள். இவர்கள் தங்கள் வீடுகளில் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு மீண்டும் வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்தனர்.

இந்நிலையில், அங்கு வந்த தெரு நாய்கள் கூட்டம் கட்டிவைத்திருந்த ஆடுகளை கடித்து குதறின. இதில் சம்பவ இடத்திலேயே 7 ஆடுகள் உயிரிழந்தன. 3 ஆடுகள் காயமடைந்த நிலையில் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையளித்தனர்.

இதனையடுத்து அப்பகுதி இளைஞர்கள் திரண்டு நாய்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் தயிர்பாளையம் வி.ஏ.ஒ. செந்தில்குமார் நேரில் பார்வையிட்டார்.

மேலும் ஆடுகளை கடித்து குதறும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவத்தால் விவசாயிகளை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News