60 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் வட மாநில நபர் கைது
குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்ற வட மாநில நபரை கைது செய்து, அவரிடமிருந்து 60 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;
60 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் வட மாநில நபர் கைது
குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்ற வட மாநில நபரை கைது செய்து, அவரிடமிருந்து 60 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
குமாரபாளையம் சுந்தரம் நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எஸ்.ஐ. கங்காதரன் உள்ளிட்ட போலீசார் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விற்பனை நடப்பது தெரியவந்தது. நேரில் சென்ற போலீசார், விற்பனையில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜூ சிங், 20, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 60 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.