குமாரபாளையத்தில் அதிமுக.,வின் 50வது ஆண்டு பொன் விழா கொண்டாட்டம்
குமாரபாளையத்தில் அதிமுக.,வின் 50வது ஆண்டு பொன் விழா கொண்டாட்டாடப்பட்டது.;
குமாரபாளையத்தில் அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நகர செயலர் நாகராஜன், அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா திருவுருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி வழிகாட்டுதல்படி, அ.தி.மு.க. 50வது ஆண்டு பொன் விழா கட்சி அலுவலகத்தில் நகர செயலர் நாகராஜன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா திருவுருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியின் கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் நகர துணை செயலர் திருநாவுக்கரசு, குமணன், பழனிச்சாமி, சேகர் ஜூவல்லர்ஸ் தனசேகரன், ராஜா, விஸ்வநாதன், சேகர், உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகி புருசோத்தமன் தலைமையில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா திருவுருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நகர தலைவர் சிங்காரவேல், மகேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.