குமாரபாளையத்தில் 500 மரக்கன்றுகள் நட இடம் ஆய்வு

குமாரபாளையத்தில் 500 மரக்கன்றுகள் நட முதற்கட்டமாக இடம் ஆய்வு செய்யபட்டது.;

Update: 2024-05-29 10:00 GMT

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி கல்லங்காட்டுவலசு பகுதிக்கு நேரில் வந்த வனத்துறையினருக்கு ஊராட்சி தலைவி புஷ்பா, முன்னாள் தலைவர் செல்லமுத்து ஆகியோர், மரக்கன்றுகள் நடவிருக்கும் இடத்தை காண்பித்தனர்.

குமாரபாளையத்தில் 500 மரக்கன்றுகள் நட முதற்கட்டமாக இடம் ஆய்வு செய்யபட்டது.

எப்போதும் இல்லாமல் இந்த ஆண்டு கோடைக்காலம் கடுமையாக இருந்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும் அவதிக்கு ஆளாகி வந்தனர். மரங்கள் இல்லாத நிலையே இந்த கடும் வெப்பத்துக்கு காரணம் என பலரும் தெரிவித்து வந்தனர். இதனால் மரக்கன்றுகள் வளர்க்க வேண்டி, அரசு சார்பிலும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

இடம் இருக்கும் பட்சத்தில், வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனையொட்டி தட்டான்குட்டை ஊரட்சி தலைவி புஷ்பா, தங்கள் ஊராட்சியில் 500 மரக்கன்றுகள் தர தயார் என கூறியிருந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் மகளிரணி மாவட்ட அமைப்பாளர் சித்ராவிடம் தகவல் தெரிவிக்க, இது குறித்து நாமக்கல் மாவட்ட வனத்துறையினர் மூலமாக மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்யப்பட்டது.

வனத்துறை அலுவலர் செல்வம் உள்ளிட்ட பலர் கல்லங்காட்டுவலசு பகுதிக்கு நேரில் வந்து, முதற்கட்டமாக இடம் ஆய்வு செய்தனர். தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா, முன்னாள் தலைவர் செல்லமுத்து ஆகியோர் இடத்தை காண்பித்தனர். இது குறித்து மேலதிகாரிகள் வசம் கூறி, மரக்கன்றுகள் நட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் கூறினர்.

Similar News