பொன்விழா காணும் குமாரபாளையம் சார்பதிவாளர் அலுவலகம்

சங்ககிரி உட்கோட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, தனி சார்பதிவாளர் அலுவலகம் குமாரபாளையத்தில் துவக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது; இதன் பொன்விழா தொடங்கியுள்ளது.

Update: 2021-07-01 14:43 GMT

குமாரபாளையம் சார்பதிவாளர் அலுவலக பொன்விழா ஆண்டை முன்னிட்டு, அலுவலகத்தின்  மூத்த ஆவண எழுத்தர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சார்பதிவாளர் அலுவலகம், 1972 ம் ஆண்டு சங்ககிாி சாா்பதிவாளா் அலுவலகத்தில் இருந்து பிரிக்கபட்டு, 1/7/1972 ஆண்டு முதல்,  குமாரபாளையத்தில் தொடங்கி செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தின் ஐம்பதாவது ஆண்டு பொன்விழாவையொட்டி, குமாரபாளையம் சார்பதிவாளர் அலுவலக அலுவலர்கள், மற்றும் மூத்த ஆவண எழுத்தர்களுக்கு, சார்பதிவாளர் குமரேசன் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில், மூத்த முன்னோடிகள் கே.தேவராஜ்,  ஆர்.டி. சந்திரசேகரன், பி.சோமசுந்தரராஜன், எஸ்.என். மதியழகன், எஸ்.என். இன்பநாதன் உள்பட ஆவண எழுத்தர்களும், அலுவலகப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News