50 என்.சி.சி. மாணவர்களின் சீருடைகளை தைத்து கொடுத்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகி
குமாரபாளையத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவர்கள் 50 பேருக்கு என்.சி.சி. சீருடைகளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகி இலவசமாக தைத்து கொடுத்தார்.;
குமாரபாளையத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவர்கள் 50 பேருக்கு என்.சி.சி. சீருடைகளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகி கோபாலகிருஷ்ணன் இலவசமாக தைத்து கொடுத்தார்.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 50 என்.சி.சி. மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு ஈரோடு 15வது பட்டாலியன் சார்பில் சீருடை இலவசமாக வழங்கப்பட்டது.
இதனை இலவசமாக தைத்து தர மக்கள் நீதி மய்யம் மாவட்ட இளைஞர் அணி துணை செயலரும், சூர்யா சில்க்ஸ் உரிமையாளருமான கோபாலகிருஷ்ணன் முன்வந்தார். 50 சீருடைகளை தைத்து, அவற்றை மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்வு பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமையில் நடைபெற்றது. சீருடைகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
கோபாலகிருஷ்ணன் பேசுகையில், என்.சி.சி. மாணவர்கள் நல்ல முறையில் பயிற்சி பெற்று நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன்னலமின்றி பாடுபட வேண்டும். ஆண்டுதோறும் என்.சி.சி. சீருடைகள் நான் தைத்து கொடுப்பதுடன், என்.சி.சி. மாணவர்களுக்கு பெல்ட் மற்றும் தொப்பிகள் வழங்க உள்ளேன் எனப் பேசினார்.
இதில் உதவி தலைமை ஆசிரியர் அங்கப்பராஜ், நெசவு தொழில்நுட்ப ஆசிரியர் கார்த்தி, வணிகவியல் ஆசிரியர் ராமசந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.