குமாரபாளையம் அருகே 5 டன் ரேஷன் அரிசி பதுக்கல்: ஒருவர் கைது

குமாரபாளையம் அருகே 5 டன் ரேஷன் அரிசியை பதுக்கியதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-02-24 14:45 GMT

குமாரபாளையம் அருகே 5 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பதுக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையம் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்த நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி நேற்று மாலை 2 மணியளவில் குமாரபாளையம் அருகே ஆனங்கூர் ரோடு, வீ.மேட்டுர், அரசு நடுநிலைப்பள்ளி அருகே, நாமக்கல் அலகு எஸ்.ஐ. அகிலன், எஸ்.எஸ்.ஐ. சத்தியபிரபு, தலைமை காவலர் கூத்தக்கவுண்டன் ஆகியோர் மாருதி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு மாருதி ஆம்னி காரிலிருந்து அரிசி மூட்டைகளை இறக்கி கொண்டிருந்த, பவானி, குருப்பநாயக்கன்பாளையம், நேதாஜி நகர், சக்திவேல் (34) என்பவரிடம் விசாரணை செய்தனர். முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறிய நிலையில் ரேசன் அரிசி கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது. பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ எடை கொண்ட 102 பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில் 5 ஆயிரத்து 100 கிலோ ரேசன் அரிசி கைப்பற்றப்பட்டு, சக்திவேலை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News