குமாரபாளையம் அருகே 5 முறை வார்டு உறுப்பினராக தேர்வானவர் மாரடைப்பால் சாவு
குமாரபாளையம் அருகே 5 முறை வார்டு உறுப்பினராக தேர்வானவர் மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
சின்னராமன்.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி 11வது வார்டு உறுப்பினராக தேர்வானவர் சின்னராமன், 54. இவருக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் இருந்ததால் இதே ஊராட்சியில் இதே வார்டில் 5வது முறையாக வெற்றி பெற்றார்.
இவர் நெஞ்சு வலி காரணமாக ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது, இவரை பரிசோதித்த டாக்டர் இவர் இறந்து விட்டார் என தெரிவித்தனர்.
இதனையடுத்து இவரது உடல் இறுதிச்சடங்கிற்காக கொண்டுவரப்பட்டது. இவரது உடலுக்கு தட்டான்குட்டை ஊராட்சி மட்டுமின்றி அக்கம் பக்கம் உள்ள ஊராட்சிகளில் இருந்தும் நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.