குமாரபாளையம் சேர்மன் வழங்கிய 5 கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிப்பான்

குமாரபாளையம் நகராட்சி சேர்மன் 5 கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிப்பான்களை பணியாளார்களுக்கு வழங்கினார்.;

Update: 2022-09-27 09:45 GMT
குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய் கண்ணன் பணியாளர்களுக்கு கொசுமருந்து தெளிப்பான் கருவிகளை வழங்கினார்.

குமாரபாளையம் நகராட்சியில் மலேரியா, சிக்குன் குனியா, டெங்கு போன்ற கொசுக்களின் மூலம் ஏற்படும் வைரஸ் நோய்களை கட்டுப்படுத்த 5 புதிய புகை மருந்து தெளிப்பான்கள் வாங்கப்பட்டது. இதனை மலேரியா, டெங்கு ஒழிப்பு பணியாளர்களிடம் சேர்மன் விஜய்கண்ணன் வழங்கினார். கமிஷனர் (பொ) ராஜேந்திரன், உதவி பொறியாளர் கண்ணன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ. செல்வராஜன், சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News