குமாரபாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: 5 பேர் கைது
குமாரபாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.;
குமாரபாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விற்பனை செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டு 32 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பேக்கட் நகரில் பல இடங்களில் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் குமாரபாளையம் போலீசாருக்கு கிடைத்தது. இதன்படி நகரின் அனைத்து பகுதியிலும் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில், கே.ஒ.என். தியேட்டர் அருகே நாகராஜ் 63, ஆலங்காட்டுவலசு பகுதியில் சுப்ரமணி 44, ஓலைப்பாளையம் பகுதியில் ரத்தினசாமி 56, பூபதி 36, பெராந்தர்காடு பகுதியில் ராஜேந்திரன் 53 ஆகிய 5 பேர் பிடிபட்டனர். இவர்களிடம் 32 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.