பள்ளிபாளையம்: சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

பள்ளிபாளையத்தில், சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-07-05 14:15 GMT

நாமக்கல் மாவட்டம், வெப்படை காவல்நிலைய உதவி ஆய்வாளர் .நடராஜனுக்கு, மக்கிரிபாளையம் தனியார் கல்லூரி நத்தமேடு அருகில்,  சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில், காவல் நிலைய உதவி ஆய்வாளர் நடராஜன், தலைமைக்காவலர் பிரபாகரன் மற்றும் தலைமைக்காவலர் .லட்சுமணகுமார் ஆகியோர்,  வெப்படை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மக்கிரிபாளையம் தனியார் கல்லூரி நத்தமேடு அருகில் சீட்டுகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதை கண்டனர். 

இதன் பேரில்  கருப்புசாமி, (41) வினோத்குமார், (37) மதேஸ்வரன், (39) செல்வராஜ், (51) மற்றும் ரவி, (54) ஆகியோரை கைது செய்ததோடு, சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட ரூ. 1,15,970/- பணம் மற்றும் சூதாட்டப் பொருட்களை கைப்பற்றினர்.

Tags:    

Similar News