38 ஆண்டுகள் அ.தி.மு.க. கட்சி பணியாற்றிய தொண்டருக்கு மாவட்ட துணை செயலர் பதவி
குமாரபாளையத்தில் 38 ஆண்டுகள் அ.தி.மு.க. கட்சி பணியாற்றிய தொண்டருக்கு மாவட்ட துணை செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.;
38 ஆண்டுகள் அ.தி.மு.க. கட்சி பணியாற்றிய தொண்டருக்கு மாவட்ட துணை செயலர் பதவி
குமாரபாளையத்தில் 38 ஆண்டுகள் அ.தி.மு.க. கட்சி பணியாற்றிய தொண்டருக்கு மாவட்ட துணை செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம் அப்பன் காடு பகுதியில் வசிப்பவர் முருகேசன், 55. இவர் அ.தி.மு.க. கட்சியில் 38 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இவர் மூன்று முறை நகராட்சி கவுன்சிலராகவும், பெண்கள் வார்டாக இவரது வார்டு அறிவிக்கப்பட்டதால், இவரது மனைவி ஜெயலட்சுமி ஒரு முறை நகராட்சி கவுன்சிலராகவும் பணியாற்றியுள்ளனர். இவரது மைத்துனர் சிவசக்தி தனசேகரன் நகராட்சி தலைவராக பணியாற்றியவர். இவரது வெற்றிக்காக அயராது உழைத்ததுடன், உடனிருந்து ஆலோசனைகள் வழங்கி, நகராட்சி தலைவர் தனசேகரனுக்கு உதவியாக இருந்து வந்தார். இவரது கட்சிப் பணியை அங்கீகரிக்கும் விதமாக, முன்னாள் அமைச்சர் தங்கமணி பரிந்துரையின் பேரில், முன்னாள் முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி உத்திரவுப்படி, நாமக்கல் மாவட்ட இணைச் செயலராக முருகேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் பாராட்டினர்.
படவிளக்கம் :
குமாரபாளையத்தில் 38 ஆண்டுகள் அ.தி.மு.க. கட்சி பணியாற்றிய தொண்டர் முருகேசனுக்கு, மாவட்ட துணை செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு, முருகேசன் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.