குமாரபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் 3000 மரக்கன்றுகள் நடும் விழா
குமாரபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் 3000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.;
கத்தேரி ஊராட்சியில் நடைபெற்ற மரம் நடுவிழா.
குமாரபாளையம் ரோட்டரி சங்கம், கத்தேரி ஊராட்சி சார்பில் 3000 மரக்கன்றுகள் நடும் விழா ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார், கத்தேரி ஊராட்சி தலைவி தமிழ்செல்வி தலைமையில் நடைபெற்றது. ரோட்டரி மாவட்ட ஆளுநர் சுந்தரலிங்கம், மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் செல்வகுமார் மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தனர்.
சிறப்பு திட்டங்கள் மாவட்ட தலைவர் ரேவதி கூறுகையில், குறுங்காடுகள் திட்டம் எனும் திட்டத்தின் கீழ் 3000 மரக்கன்றுகள் நடும் வகையில் இந்த பணி நடைபெறுகிறது. மரங்கள் மனித வாழ்வின் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. அனைவரும் மரங்களை வளர்க்க முன் வர வேண்டும். தங்கள் பிள்ளைகளை மரக்கன்று நட ஊக்குவிக்க வேண்டும். தமிழக அரசும் மரக்கன்றுகள் நடுவதை ஊக்குவித்து வருகிறது. 2 மாதமாக புதர் மண்டி கிடந்த இந்த இடத்தை சுத்தம் செய்து உறுதுணையாக இருந்த கத்தேரி ஊராட்சிக்கு வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்தார்.
இந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விடுவதற்காக அமைக்கப்பட்ட பம்ப் செட்டை முன்னாள் மாவட்ட ஆளுநர் பட்டன் அழுத்தி துவக்கி வைத்தார்.
நிர்வாகிகள் சிவசுந்தரம், கத்தேரி துணை தலைவி கவிதா மேரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, அசோகன், சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.