குமாரபாளையத்தில் போலி லாட்டரி குட்கா விற்ற 3 நபர்கள் கைது
குமாரபாளையத்தில் போலி லாட்டரி, குட்கா விற்ற 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர்
குமாரபாளையத்தில் போலி லாட்டரி மற்றும் குட்கா விற்ற 3 நபர்களை போலீஸார் கைது செய்தனர்
குமாரபாளையம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜ்குமார்( 45,) சேகர்( 55.). இவர்கள் அதே பகுதியில் போலி லாட்டரி சீட்டு விற்பதாக தகவல் கிடைத்து, குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதே போல் வட்டமலை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார்(45.). இவர் அதே பகுதியில் குட்கா விற்பதாக தகவல் கிடைத்தை தகவலின்பேரில், குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று, இவரையும் கைது செய்து, அவரிடமிருந்த இரண்டரை கிலோ குட்கா பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.