குமாரபாளையத்தில் டூவீலர் மீது வேன் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம்
குமாரபாளையத்தில் டூவீலர் மீது மில் வேன் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
குமாரபாளையம் சேலம் சாலை பவர்ஹவுஸ் அருகே இந்தியன் பேக்ஸ் கடையில் பணியாற்றும் முகமது மிதுலாஜ் (வயது 25,) தனது பல்சர் டூவீலரை ஓட்ட, அதே பேக்கரியில் பணியாற்றும் தன்சீர்,( 25, )கைஸ்ஜாஸ்,( 22, ) ஆகிய இருவரும் பின்னால் உட்கார்ந்து செல்ல, நேற்றுமுன்தினம் இரவு 10:40 மணியளவில் சேலம் கோவை புறவழிச்சாலையில் கத்தேரி பிரிவு பகுதியில், சாலையை கடக்க நின்ற போது, தனியார் மில் வேன் ஓட்டுனர் வேகமாக வந்து இவர்களின் டூவீலர் மீது மோத மூவரும் பலத்த காயமடைந்தனர். இவர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் தனியார் மில் வேன் ஓட்டுனர் படைவீடு பகுதியை சேர்ந்த ரவிக்குமார்,( 29, )என்பவரை கைது செய்தனர்.