வரும் 31ல் நியமன குழு உள்ளிட்ட 3 தேர்தல்கள்: வரி செலுத்த 28க்ம் தேதி கடைசி
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நியமனக்குழு தேர்தல் உள்ளிட்ட 3 தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.;
நியமனக்குழு தேர்தல் உள்ளிட்ட 3 தேர்தல்கள் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக நகராட்சி கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கமிஷனர் சசிகலா கூறுகையில், குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மார்ச் 31ல் நியமனக்குழு உறுப்பினர் தேர்தல், ஒப்பந்தக்குழு உறுப்பினர் தேர்தல் மற்றும் வரி மேல்முறையீடு குழு தேர்தல் ஆகியவை நடைபெறவுள்ளது. குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 9 கடைகள் காலியாக உள்ளன. அவைகள் முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மார்ச் 28 முதல் 30ம் தேதிக்குள் முதல் நகரமன்ற கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. குமாரபாளையம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்கள் செலுத்த மார்ச் 28 இறுதி நாள். இதன் பின்பும் வரி செலுத்தாத நபர்கள் மீது, கடைகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். உரிய காலத்தில் வரிகளை செலுத்தி, 100 சதவீத வரி வசூல் செய்யப்பட்ட நகராட்சி என பெயர் பெற்றிடவும், நிர்வாகம் சிறப்புடன் நடைபெறவும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.