3 நாட்களுக்கு பின் குமாரபாளையம் டாஸ்மாக் கடைகளில் திரண்ட குடிமகன்கள்

3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் குமாரபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் திரண்டனர்.;

Update: 2022-07-10 12:30 GMT

குமாரபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் திரண்டனர்.

ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றதால் மூன்று நாட்கள் டாஸ்மாக் விடுமுறை விடப்பட்டிருந்தது. தேர்தல் முடிந்த நிலையில் நேற்று டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. நேற்று ஞாயிறு என்பதால் அதிக அளவிலான ஆண்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். இந்நிலையில் விடுமுறை விடப்பட்ட நாட்களில் பெட்டிக்கடை, ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் மதுபானங்கள் குடிக்க அனுமதித்ததற்காக வீரசெட்டி (வயது42,) வேலு,( வயது48)முத்து(வயது 38 )ஆகிய மூன்று பேர் கைது குமாரபாளையம் போலீசாரால் செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News