பள்ளிபாளையத்தில் மது விற்ற 3 பேர் கைது: 163 மது பாட்டில்கள் பறிமுதல்
பள்ளிபாளையத்தில் மது விற்பனை செய்ததாக 3 பேரை கைது செய்து 163 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியில் கள்ளத்தனமாக அதிக விலைக்கு மதுவிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவகள் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையிலான போலீசார் நேரில் சென்று மறைந்து கண்காணித்தனர்.
அங்கு அதே பகுதியை சேர்ந்த அய்யனார், 33, ரமேஷ், 42, மாரிமுத்து, 65, ஆகிய மூவரும் அதிக விலைக்கு மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களிடமிருந்து 163 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் மூவரும் கைது செய்யப்பட்டனர்.