அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2 ம் நாள் கலந்தாய்வு

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில்நடைபெற்ற 2 ம் நாள் கலந்தாய்வில் 47 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்றது.;

Update: 2021-08-24 15:45 GMT

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பைல் படம்).

இதுகுறித்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரகுபதி (பொ) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021 - 2022 கல்வியாண்டிற்கு பி.ஏ.தமிழ், ஆங்கிலம், பொருளியல், பி.எஸ்.சி. கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், பி.காம்., பி.பி.ஏ., ஆகிய இளநிலை பாடப் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கும், அதை தொடர்ந்து பிற மாணவர்களுக்கும் 2 நாட்கள் நடைபெற்றது. கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களின் தரவரிசை பட்டியல் கல்லூரியின் இணையதளம் மற்றும் கல்லூரி தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. இணைய வழியில் பதிவு செய்த மாணவர்கள் ஆக. 24ல் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு நேரில் வருகை தந்து 2ம் நாள் கலந்தாய்வில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டனர். 2 நாள் கலந்தாய்வில் 47சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News