குமாரபாளையம் அருகே 29 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையத்தில் 29 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-07-31 15:15 GMT

பள்ளிபாளையம் காவல் நிலையம் (பைல் படம்)

குமாரபாளையம் தாஜ்நகர் பகுதியில் சட்ட விரோதமாக குட்கா விற்பதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேரில் சென்ற போலீசார் அங்குள்ள மளிகை கடையில் விற்பது தெரியவந்தது. இதையொட்டி மளிகை கடை உரிமையாளர் ஜீவா (வயது37.) என்பவரை கைது செய்த போலீசார் கடையில் இருந்த 29 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News