குமாரபாளையம் நகராட்சியில் 248 பேர் வேட்புமனு தாக்கல்

குமாரபாளையம் நகரமன்ற தேர்தலில் போட்டியிட 248 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2022-02-04 13:30 GMT

குமாரபாளையம் நகராட்சி

குமாரபாளையம் நகரமன்ற தேர்தலில் போட்டியிட 248 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக அரசு சார்பில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்கள் ஜன. 28 முதல் பெறப்பட்டன. வேட்புமனு தாக்கல் இறுதி நாளான நேற்று குமாரபாளையம் நகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. 37, தி.மு.க. 30, பா.ஜ.க. 13, நாம் தமிழர் கட்சி 19, தே.மு.தி.க. 7, சி.பி.ஐ. 1, காங்கிரஸ் 2, பாட்டாளி மக்கள் கட்சி 3, ம.தி.மு.க. 2, சுயேச்சை 21 மொத்தம் 135 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். பிப். 3 வரை வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் 113. ஆக மொத்தம் 248 வேட்பாளர்கள் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

Tags:    

Similar News