கலெக்டரிடம் உடல்கள் தானம் வழங்க கடிதம் கொடுத்த 16 சமூக ஆர்வலர்கள்!

குமாரபாளையம் 16 சமூக ஆர்வலர்கள் கலெக்டரிடம் உடல்கள் தானம் வழங்க கடிதம் கொடுத்தனர்.

Update: 2024-12-02 10:45 GMT

படவிளக்கம் : குமாரபாளையம் 16 சமூக ஆர்வலர்கள் கலெக்டரிடம் உடல்கள் தானம் வழங்க கடிதம் கொடுத்தனர்.

கலெக்டரிடம் உடல்கள் தானம் வழங்க கடிதம் கொடுத்த 16 சமூக ஆர்வலர்கள் - குமாரபாளையம் 16 சமூக ஆர்வலர்கள் கலெக்டரிடம் உடல்கள் தானம் வழங்க கடிதம் கொடுத்தனர்.

குமாரபாளையம் மற்றும் சில பகுதிகளை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் 16 பேர் நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் உடங்கள் தானம் வழங்க கடிதம் வழங்கினர். இது குறித்து சமூக ஆர்வலர் சித்ரா கூறியதாவது:

மக்கள் நீதி மய்யம் முன்னாள் நகர செயலர் சரவணனின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி உடல் தானம் வழங்க, மாவட்ட கலெக்டரிடம் கடிதம் வழங்கப்பட்டது. உடல் தானம் என்பது மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமலஹாசன் வழிகாட்டினர். அவர் வழியை பின்பற்றி நாங்கள் தற்போது உடல்தானம் வழங்கி உள்ளோம். இது போல் மற்றவர்களுக்கும் உடல்தானம் வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடல்தானம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.

Tags:    

Similar News