குமாரபாளையம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 16 பேர் காயம்: மருத்துவமனையில் அனுமதி
குமாரபாளையம் ஜல்லிக்கட்டு போட்டியில் 16 பேர் காயமடைந்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.;
குமாரபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள்.
குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. காலை 08:30 மணியளவில் துவங்கிய போட்டிகள் மாலை 06:00 மணிக்கு மேல் நிறைவு பெற்றது.
இதில் மாடுகள் முட்டியதில் பலரும் காயமடைந்தனர். தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் உடனுக்குடன் இவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்கள் விபரம்:
சேலம் அண்ணாமலை, 28, ரங்கநாதன், 25, உசிலம்பட்டி, மதுரை, கிருஷ்ணமூர்த்தி, 25, சாத்தூர், மதுரை, விஜய், 26, விக்கிரவாண்டி, மதுரை, கோபாலன், 21, தேனி சாலை, மதுரை, யோகேஸ்வரன், 23, திண்டுக்கல், ராஜபாண்டி, 21, வாடிப்பட்டி, தினேஷ், 24, திருச்சி, பெரியசாமி, 50, ராசிபுரம், விநாயகம், 30, சேந்தமங்கலம், நவீன், 23, திருச்சி, லெனின், 24, திருச்சி, வீரன்,23, திண்டுக்கல், பிரசாத், 25, மதுரை, அன்பழகன், 25, கெங்கவல்லி, சரவணன், 21, திருச்சி.
இது தவிர வேறு மற்ற மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.