வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை

குமாரபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.;

Update: 2025-05-10 15:29 GMT

வீட்டின் பூட்டை உடைத்து

15 பவுன் நகை கொள்ளை


குமாரபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து

15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

குமாரபாளையம் கலைமகள் வீதியில் வசிப்பவர் ராஜேந்திரன், 65. பார்மசி தொழில். மே. 8ல் நண்பரின் மகன் திருமணத்திற்கு இவரும், இவாது மனைவியும் திருச்சி சென்றனர். நேற்றுமுன்தினம் காலை 06:30 மணியளவில், வீடு திறந்து இருப்பது கண்டு, ராஜேந்திரனுக்கு, அருகில் வசிக்கும் மோகன் என்பவர் போன் மூலம் தகவல் சொல்ல, உறவினரை வர சொல்லி பார்க்க சொல்லியுள்ளனர். அவரும் பார்த்துவிட்டு, உள்ளே பீரோ திறந்து இருப்பதாகவும், துணிமணிகள் சிதறி கிடப்பதாகவும் சொல்ல, ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவியும் ஊர் திரும்பினர். உள்ளே சென்று பார்த்த பின் 15 பவுன் நகைகள் காணவில்லை என்று கூறினார்கள். இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News