14, 21 வார்டுகளில் பாரபட்சமின்றி சேர்மன் ஆய்வு

குமாரபாளையம் 14, 21 வார்டுகளில் பாரபட்சமின்றி சேர்மன் ஆய்வு செய்தார்.

Update: 2022-09-04 15:00 GMT

குமாரபாளையம் வார்டுகளில் சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் நகராட்சி சேர்மனாக விஜய்கண்ணன் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவருக்கு ஆதரவளித்த கவுன்சிலர்கள், ஆதரவு தராத கவுன்சிலர்கள் என பாரபட்சமின்றி நகராட்சி சார்பில் தூய்மை பணி, வடிகால் பணி, குடிநீர் விநியோகம், வாட்டர் டேங்க் அமைத்தல், தார் சாலை அமைத்தல், உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்து தருவேன் என உறுதி அளித்திருந்கார். அதன்படி, 14, 21 வார்டுகளில் ஆய்வு செய்து தேவைப்படும் உதவிகளான பொதுக்கழிப்பிடம் பராமரித்தல், பொதுக்கழிப்பிடம் புதிதாக அமைத்தல், மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்தல், கோம்பு பள்ளம் தூய்மை செய்தல், புதர்களை அகற்றி பூச்சி, புழுக்கள் தொந்தரவில் இருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார். கவுன்சிலர்கள் தீபா, பரிமளம், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார்,சரவணன், ஜுல்பிகர்அலி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


Tags:    

Similar News