குமாரபாளையம் நகராட்சி சார்பில் சென்னைக்கு ரூ.13 லட்சம் நிவாரண பொருட்கள்
குமாரபாளையம் நகராட்சி சார்பில் ரூ.13 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.;
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குமாரபாளையம் நகராட்சி சார்பில் 13 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
சென்னையில் கடந்த சில நாட்களாக புயல் மற்றும் தொடர் மழை காரணமாக அனைத்து பகுதி மக்களும் தங்கள் உடைமைகள் இழந்து, வேலைக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, உணவுக்கு கூட இயலாத நிலையில் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.இது போன்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவிட வேண்டி பல்வேறு தரப்பட்ட மக்கள் தொடர்ந்து வருகிறார்கள்.
இதன் ஒரு கட்டமாக நாமக்கல் மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் அறிவுறுத்தல்படி, குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நேற்று அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள், சோப்பு, சீப்பு, கண்ணாடி, சமையல் எண்ணெய் ,பெட்ஷீட், வேட்டி, சட்டை துண்டு, சோப்பு, பாக்கெட் ஷாம்பு, நாப்கின் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. நகராட்சி ஆணையாளர் சரவணன், பொறியாளர் ராஜேந்திரன், நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் ஜேம்ஸ், வேல்முருகன், ராஜ், கோவிந்தராஜ், உள்பட பலர் பங்கேற்றனர்.