குமாரபாளையம் அருகே 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவன் மாயம்
குமாரபாளையம் அருகே 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவன் மாயமானார்.;
குமாரபாளையத்தில் 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவன் மாயமானார்.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி வீரப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இந்திரகாந்த், 17. இவர் குள்ளநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு 07:00 மணியளவில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தகவல் தெரிந்தால் குமாரபாளையம் எஸ்.ஐ. செல் நெம்பர் 98941 09579க்கு தெரியப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.