பவானி அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது: போலீசார் அதிரடி

ஈரோடு மாவட்டம், பவானி அருகே சித்தோடு பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக 11 பேர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-21 08:30 GMT

ஈரோடு மாவட்டம், பவானி அருகே சித்தோடு, சடையம்பாளையம் டாஸ்மாக் கடை பின்புறம் உள்ள முள் காட்டில் பணம் வைத்து சூதாதுவதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் சித்தோடு காவல் நிலைய எஸ்.ஐ., பிரகாசம் தலைமையில் சம்பவ இடத்தில் நேரில் சென்றனர். அங்கு 11 பேர்  பணம் வைத்து, வெட்டாட்டம் எனும் சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து, அவர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில் சித்டோட்டை சேர்ந்த சந்திரசேகரன், 50, சுந்தரம், 58, கோவிந்தசாமி, 52, குமரேசன், 29, பழனிச்சாமி, 52, பூபதி, 30, கார்த்தி, 29, மோகன்குமார், 33, அசோக், 31, ராமசாமி, 50, செம்மினி, 57, என்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து 11 பேரும் கைது செய்து, பணம் 1,100 மற்றும் 52 சீட்டுகள் ஆகியவற்றை சித்தோடு போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News