100 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் நால்வர் கைது, கார் பறிமுதல்
குமாரபாளையத்தில் 100 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்ததுடன், நால்வர் கைது செய்யப்பட்டு, கார் பறிமுதல் செய்யப்பட்டது.;
100 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் நால்வர் கைது, கார் பறிமுதல்
குமாரபாளையத்தில் 100 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்ததுடன், நால்வர் கைது செய்யப்பட்டு, கார் பறிமுதல் செய்யப்பட்டது.
குமாரபாளையம் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை அதிகம் நடப்பதாக வந்த தகவலின்படி, இன்ஸ்பெக்டர் தவமணி உத்திரவின் பேரில், எஸ்.ஐ. தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ.க்கள் குணசேகரன், பொன்னுசாமி, ராம்குமார், வரதராஜன் உள்பட போலீசார் பலரும் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். சேலம் கோவை புறவழிச்சாலை கோட்டைமேடு அருகே தனியார் திருமண மண்டபம் அருகே நேற்றுமுன்தினம் காலை 10:00 மணியளவில் ரோந்து பணி மேற்கொண்டபோது, சரக்கு வாகனத்தில் வந்த ஒருவர் மூட்டைகளை கொடுக்க, மாருதி ஆம்னி மற்றும் ஹோண்டா கார் ஆகியவற்றில் சில மூட்டைகளை இருவர் ஏற்றிக்கொண்டு இருந்தனர். இதனை கண்ட போலீசார் நேரில் சென்று விசாரணை செய்ததில், அவைகள் போதை பொருட்கள் என்பதும், இதன் எடை 1.359 டன் என்பதும் தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார், இதில் ஈடுபட்ட கவுந்தப்பாடியை சேர்ந்த தனபால், 46, கோவை, கணபதி பகுதியை சேர்ந்த ராம்குமார், 38, தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன், 30, ஆகிய மூவரையும் கைது செய்ததுடன், சரக்கு வாகனம், மாருதி ஆம்னி மற்றும் ஹோண்டா கார் ஆகிய மூன்று வாகனங்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்த போது, மேலும் நான்கு பேருக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கோவையை சேர்ந்த அந்தோணிராஜ், 41, ஜோசப், 63, தூத்துக்குடியை சேர்ந்த காளிமுத்து, 27, அமலாபட்டுராஜா, 37, ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு, இவர்களிடமிருந்து 100 கிலோ குட்கா, டாடா போல்டு கார் பறிமுதல் செய்யப்பட்டது.