10 வருட தலைமறைவு குற்றவாளி கோவையில் கைது
குமாரபாளையம் வழக்கு சம்பந்தமாக 10 வருட தலைமறைவு குற்றவாளி கோவையில் கைது செய்யபட்டார்.;
10 வருட தலைமறைவு குற்றவாளி
கோவையில் கைது
குமாரபாளையம் வழக்கு சம்பந்தமாக 10 வருட தலைமறைவு குற்றவாளி கோவையில் கைது செய்யபட்டார்.
இது குறித்து ஏ.டி.எஸ்.பி. சண்முகம், இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது:
குமாரபாளையத்தில் 2012ல், வழிப்பறியில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட, திருபத்தூர் மாவட்டம் கோட்டான்கல்லூர், பெரம்பட்டு பகுதியைச் சேர்ந்த மாது, 47 (எ) கொர மாது, 2015ல் வெளியே வந்தவர், 10 ஆண்டுகளாக தலைமறைவானார். நீதிமன்ற உத்திரவுப்படி இவர தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இவரை நேற்று தனிப்படை போலீசார் கோவையில் கைது செய்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
படவிளக்கம் :
குமாரபாளையம் தலைமறைவான குற்றவாளி மாது.