பூட்டை உடைத்து 10 பவுன் நகை, பணம் கொள்ளை!

குமாரபாளையத்தில் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.;

Update: 2024-12-29 09:30 GMT

 பூட்டை உடைத்து 10 பவுன் நகை, பணம் கொள்ளை

குமாரபாளையத்தில் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

குமாரபாளையம் கிழக்கு காவேரி நகரில் வசிப்பவர் சுசீலா, 65. மகளிர் குழு நிர்வாகி. இவர் டிச. 12ல் தன் வீட்டை பூட்டி விட்டு, பக்கத்துக்கு வீட்டில் தூங்கினார். காலை எழுந்து வந்து பார்த்த போது, தன் வீட்டு பூட்டு காணவில்லை. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை, 5 ஆயிரம் ரூபாய் ஆகியவை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்ததின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.


Tags:    

Similar News