அரசு பஸ், தனியார் பஸ் மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம்

பள்ளிபாளையம் எஸ்.பி.பி காலனி மேம்பாலத்தில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் பயங்கரமாக மோதிக்கொண்டதில் அரசு பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்தனர்

Update: 2024-08-14 00:45 GMT

படவிளக்கம் : பள்ளிபாளையம் எஸ்.பி.பி காலனி மேம்பாலத்தில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் மோதிக்கொண்டன.

அரசு பஸ், தனியார் பஸ் மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம்

பள்ளிபாளையம் எஸ்.பி.பி காலனி மேம்பாலத்தில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் பயங்கரமாக மோதிக்கொண்டதில் அரசு பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்தனர்

கள்ளக்குறிச்சியில் இருந்து ஈரோடு நோக்கி அரசு பேருந்து ஒன்று பள்ளிபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அரசு பேருந்தை ஆத்தூர் மல்லியக்கரை பகுதியை சேர்ந்த முருகன், ஓட்டி கொண்டு வந்தார். ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு நோக்கி தனியார் பேருந்தை பள்ளிபாளையத்தில் சேர்ந்த கதிரவன் என்பவர் ஓட்டிக்கொண்டு வந்தார். அப்போது எஸ்.பி.பி காலனி மேம்பாலம் அருகே வரும் பொழுது, அரசு பேருந்து வேகமாக வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்தது. இதனை அடுத்து அரசுப் பேருந்தின் ஓட்டுநர் முருகன் பேருந்தின் பிரேக்கை அழுத்தியுள்ளார். அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் நிலை தடுமாறி பக்கவாட்டு பக்கமாக திரும்பி நின்றது. எதிரே வேகமாக வந்த தனியார் பேருந்து அரசு பேருந்தின் மீது மோதி நின்றது .

இதில் தனியார் பேருந்தின் முன் பக்க கண்ணாடி முழுமையாக நொறுங்கி கீழே விழுந்தது. அரசு பேருந்தின் நடுப்பகுதி பயங்கரமாக சேதமடைந்த நிலையில், அரசு பேருந்தில் பயணித்த ஏழு பெண்கள், மூன்று ஆண்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர் . அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு, பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சியில் இருந்து வேகமாக வந்த அரசு பேருந்து பாலத்தின் மேலே ஏறி இறங்கும் பொழுது மழை ஈரத்தின் காரணமாக. பிரேக் பிடிக்கும் பொழுது நிலை தடுமாறி அரசு பேருந்து நடு சாலையில் நின்று விபத்துக்குள்ளானது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக எஸ்.பி.பி காலனி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது..

பள்ளிபாளையம் எஸ்.பி.பி காலனி மேம்பாலத்தில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் மோதிக்கொண்டன.

Tags:    

Similar News