சாலையில் விபத்தை ஏற்படுத்தும் பிளக்ஸ் பேனர்கள்

பள்ளிபாளையம் ஒட்டமெத்தை ரவுண்டானா பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் பிளக்ஸ் பேனர்கள்;

Update: 2021-05-04 02:40 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒட்டமெத்தை ரவுண்டானா பகுதி குமாரபாளையம் ,சேலம் , ஈரோட்டை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது இந்நிலையில் இந்த ரவுண்டானா பகுதியில் உயிர்நீத்தவர்களுடைய பிளக்ஸ் பேனர்கள், காணவில்லை அறிவிப்புகள், கடை விளம்பரம் ,குறித்த சுவரொட்டிகள் உள்ளிட்டவைகளை  இந்த இடத்தில் சிலர் ஓட்டிச் செல்கின்றனர் இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனம் சிதறு கின்றனர்.

அதேசமயம் நகராட்சியில் பலமுறை புகார் கொடுத்தும் பலன் இல்லாததால், சமூக ஆர்வலர்கள்  நகராட்சி நிர்வாகம் இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி  பேனர்களை அகற்ற கோரியும் அதேநேரம் பேனர் வைப்பவர்கள் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பிறகு அதை எடுத்து செல்லும் வகையில் அறிவுரைகளை அல்லது நடவடிக்கைகளை மேள்கொள்ள கோரியும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags:    

Similar News