பள்ளிப்பாளையத்தில் அதிமுக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்

பள்ளிப்பாளையத்தில் அதிமுக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2021-05-01 14:45 GMT
பள்ளிப்பாளையத்தில் அதிமுக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்
  • whatsapp icon

சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பணிமனையில் நகர ஒன்றிய பேரூர் கழகத்தின் சார்பில் தேர்தலில் வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் முகவர்களுக்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி தங்கமணி அவர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் நகர அதிமுக செயலாளர் வெள்ளியங்கிரி தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் மற்றும் கழகத்தின் முன்னணி நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்

Tags:    

Similar News