மினி ஏடிஎம் பணம் அபேஸ்: பள்ளிப்பாளையத்தில் 2 பேர் கைது
பள்ளிபாளையத்தில் மினி ஏடிஎம் அலுவலகத்தில் வைத்திருந்த பணத்தை திருடி சென்ற இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.;
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே தெற்கு பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன்.காப்பீடு முகவரான இவர், மினி ஏடிஎம் கொண்டு வங்கி பரிவர்த்தனை செய்து வருகிறார்.
நேற்று சேலம் சாலையில் உள்ள இவரது அலுவலகத்தில் பட்ட பகலில் புகுந்து இரண்டு மர்ம நபர்கள் கடையில் உள்ளே வைத்திருந்த 20ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.இது தொடர்பாக சந்திரசேகரன் கொடுத்த புகாரின் பேரில் பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் கொண்டு இருவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில், ஏற்கனவே திருட்டு போன்ற குற்ற வழக்கில் தொடர்புடைய ஈரோடு மூலப்பாளையம்,கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்,கெளதம் ஆகிய இருவரும், இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து திருடிய பணத்தை பறிமுதல் செய்ததுடன் பூட்டை உடைக்க பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்து குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.