மாநில அளவிலான கபடி போட்டி-நாமக்கல் மாவட்ட அணி முதலிடம்

Update: 2021-03-09 05:00 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காளியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான ஆண்கள் பிரிவு கபடி போட்டியில் நாமக்கல் மாவட்ட அணி முதல் பரிசை வென்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான ஆண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் நாமக்கல், ஈரோடு, கோவை, சேலம், கரூர், சென்னை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 45 அணிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற கபடி போட்டியில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வண்ணத்தமிழ் அணியினர் முதல் பரிசும், குமாரபாளையம் அணி இரண்டாம் பரிசும், வேலூர் மாவட்டம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் மூன்றாம் பரிசும், தஞ்சை மாவட்டம் நான்காம் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு விழாக்குழுவினர் ரொக்க பணமும் சுழற்கோப்பையும் வழங்கினர்.இரண்டு நாட்கள் நடைபெற்ற கபடி போட்டியில் வீரர்கள் ஒருவருக்கொருவர் திறமையாக விளையாடி புள்ளிகளை பெற்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Tags:    

Similar News